100 நாள் வேலை திட்டம்! தமிழகம் கேட்டது ரூ. 4,034 கோடி! மத்திய அரசு கொடுத்தது எவ்வளவு தெரியுமா?

Published : May 01, 2025, 09:39 AM ISTUpdated : May 01, 2025, 09:41 AM IST

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியில், ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 

PREV
14
100 நாள் வேலை திட்டம்! தமிழகம் கேட்டது ரூ. 4,034 கோடி! மத்திய அரசு கொடுத்தது எவ்வளவு தெரியுமா?

கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி கொண்டு வந்தது. இத்திட்டம் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.  ஒரு குடும்ப அட்டைக்கு  ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும். அதன்மூலம்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். 

24
mahatma gandhi

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

இந்த வேலைக்கு ஒரு நாள் கூலியாக ரூ.50ல் தொடங்கி தற்போது ரூ.374 வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு இந்த தொகை மாறுபடும் நிலையில் தமிழ்நாட்டில் ரூ.319 இருந்த நிலையில் 17 ரூபாய் உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.336 ஆக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் 13.42 கோடி பயனடைகின்றனர். 

34
Tamil Nadu economy hits new peak with 9.69% growth

மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம் 

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மேலும் இது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மத்திய அரசு நிதி வழங்காத காரணத்தினால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

44
PM Modi writing on visitors book

தமிழகத்துக்கு ரூ.2 ,999 கோடி விடுப்பு

இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ. 4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ரூ.2 ,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories