சென்னை ஏசி மின்சார ரயில் சேவையில் நாளை முதல் மாற்றம்! வெளியான முக்கிய தகவல்!

Published : May 01, 2025, 07:40 AM ISTUpdated : May 01, 2025, 07:45 AM IST

EMU AC Train Chennai - Chengalpattu: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏப்ரல் 19 முதல் இயக்கப்பட்டு வரும் ஏசி மின்சார ரயில்களின் நேர அட்டவணை மே 2 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

PREV
14
 சென்னை ஏசி மின்சார ரயில் சேவையில் நாளை முதல் மாற்றம்! வெளியான முக்கிய தகவல்!
Chennai Electric Train

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எந்தவொரு டிராபிக் இல்லாமலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகங்களுக்கு செல்ல உதவியாக இருப்பது மின்சார ரயில்கள் தான். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள்,  வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.

24
Suburban AC trains

ஏ.சி. மின்சார ரயில் சேவை

ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.  இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில்கள் ஏப்ரல் 19ம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டண விவரமும் வெளியானது.

34
AC EMU train fares

கட்டணம் விவரம்

சென்னை கோட்டை, சென்னை பார்க், எழும்பூர் ரூ.35, மாம்பலம் ரூ.40, கிண்டி, பரங்கிமலை, திரிசூலம்  ரூ.60, தாம்பரம், பெருங்களத்தூர் ரூ.85, கூடுவாஞ்சேரி, பொத்தேரி ரூ.90, சிங்கபெருமாள்கோயில் ரூ.100,  பரனூர், செங்கல்பட்டு ரூ.105 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏசி மின்சார ரயிலில் பல வசதிகள் இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து ஏசி மின்சார ரயில் கால அட்டவணை நாளை முதல் அதாவது மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

44
AC EMU train Time Change

ரயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம்

புறநகர் ஏசி மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 7.35 மணிக்கு செங்கல்பட்டுக்கு வந்து சேரும்,  செங்கல்பட்டு ஜங்‌ஷனில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு சென்னை பீச் வந்தடையும், கடற்கரையில் இருந்து 9.41 மணிக்கு புறப்பட்டு 10.36 மணிக்கு தாம்பரம் செல்லும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு 1.55 மணிக்கு பீச் ரயில் நிலையம் வந்து அடையும், பீச் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு சென்று சேரும். மேலும் செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மாலை 6. 00 மணிக்கு வந்தடையும், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.17 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு இரவு 7:50 மணிக்கு வந்தடையும், செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு இரவு 8.50 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories