கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
இந்த விமானம் சரியான அதிகாலை 2.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். தரையிறங்க தயாராக இருந்த போது விமானி, விமானத்தில் இயந்திரங்கள் அனைத்தையும் சரி பார்த்தார். அப்போது விமானத்தின் பிரேக் சிஸ்டம் திடீரென செயல் இழந்தது தெரியவந்தது. உடனே இதுதொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து எமர்ஜென்சிங் முறையில் தரை இறக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வந்தது.