ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1888ம் ஆண்டு கொலை, கலவரத்தை உருவாக்குவது, கொடுங்குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சென்னை நகரில் நுழைய தடை விதிக்கும் வகையில் சென்னை நகர சட்டம் 51ஏ என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி சென்னைக்குள் ஓராண்டு வரை நுழைய முடியாது. அப்படி மீறி நுழையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க முடியும். அதுமட்டுமல்ல குற்றவாளி ஜாமீனில் வெளியே வர முடியாது.
24
Section 51A in Chennai City Police Act
சென்னை நகர சட்டம் 51ஏ என்றால் என்ன?
நாடு 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்று தற்போது 78 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் ஆங்கிலேயர்கள் 1888ம் ஆண்டு உருவாக்கிய சென்னை நகர சட்டம் 51ஏன் 137 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை சென்னை காவல்துறையில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலேயே இந்த சட்டம் சென்னை காவல்துறையில் மட்டும் தான் உள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர்களாக இருந்த எந்த காவல்துறை அதிகாரிகளும் இந்த சட்டத்தை நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எந்த குற்றவாளிகள் மீதும் பயன்படுத்தியது கிடையாது.
34
chennai rowdy
3 ரவுடிகள் சென்னைக்குள் ஓராண்டு நுழைய தடை
தற்போது சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக உள்ள அருண் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட சென்னை நகர சட்டம் 51ஏவை முதல் முறையாக 3 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா, லெனின் ஆகிய 3 ரவுடிகள் சென்னைக்குள் ஓராண்டு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3 ரவுடிகளில் நெடுங்குன்றம் சூர்யா மீது 5 கொலை, 12 கொலை முயற்சி வழக்கு உட்பட 64 குற்ற வழக்குகள் உள்ளது. அதேபோல்பி.லெனின் மீது 6 கொலை, 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 குற்ற வழக்குகளும், ராக்கெட் ராஜா மீது 5 கொலை, 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 20க்கும் குற்ற வழக்குகள் உள்ளது. இதையடுத்து, இவர்கள் மூன்று பேரும் சென்னை எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல்துறையினர் விசாரணை தொடர்பாகவோ தவிர வேறு காரணங்களுக்கு சென்னைக்குள் நுழையக்கூடாது. உத்தரவை மீறி நுழைந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.