ஐந்து பெண்கள் கைது
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்ணகி நகரை சேர்ந்த சுமதி (23), கலைவாணி (19), மீனா (30), கஸ்தூரி (23), ரம்யா (21) ஆகிய 5 போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 சவரன் நகைகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எப்போது வாடிக்கையாக ஷூவில் சாவியை மறைத்து வைத்து வெளியே செல்வதை நோட்டமிட்ட பெண் கொள்ளையர்கள் சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியதாக ஒப்புக்கொண்டனர். ஐ.டி.ஊழியர் வீட்டில் பெண்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.