அனைத்து வசதிகளையும் புழல் சிறை நிர்வாகம் வழங்க வேண்டும்
பின்னர் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஏ.கோபிநாத், ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனுதாரர் உள்ளிட்ட உறவினர்கள் ஹரிஹரனை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வீடியோ கால், தொலைபேசி வாயிலாகவும் பேச அனுமதிக்கப்படுகிறது என தெரிவித்தார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மற்ற கைதிகளை போல சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் ஹரிஹரனுக்கு புழல் சிறை நிர்வாகம் வழங்க வேண்டும். இதை சிறைத்துறை டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.