சென்னையில் கொட்டித்தீர்த்த கோடை மழை! மின்சாரம் துண்டிப்பு! அதுமட்டுமல்ல விமான சேவை பாதிப்பு!

Published : Apr 16, 2025, 01:21 PM ISTUpdated : Apr 16, 2025, 01:24 PM IST

Chennai Rain: சென்னையில் கடும் வெயிலுக்குப் பிறகு திடீரென மழை பெய்தது. மழையால் மின்சாரம் துண்டிப்பு, விமான சேவை பாதிப்பு போன்ற பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. 

PREV
16
சென்னையில் கொட்டித்தீர்த்த கோடை மழை! மின்சாரம் துண்டிப்பு! அதுமட்டுமல்ல விமான சேவை பாதிப்பு!
Chennai Rain

கொட்டித்தீர்த்த கோடை மழை

கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயில் 100 டிகிரி தாண்டி சுட்டெரித்து வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எப்போது மழை பெய்து குளிர்ச்சியான நிலவும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு இருள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

26
Chennai heavy Rain

இதையும் படிங்க: வாட்டி வதைத்த கோடை வெயில்; சென்னையை குளிர்வித்த திடீர் மழை, குஷியில் பொதுமக்கள்!

36
Power cut

பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடியில் பலத்த காற்றால் விளம்பர பதாகை கிழிந்து மின் கம்பிகள் மீது விழுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

46
Airline services affected

விமான சேவைகள் பாதிப்பு

சென்னை, புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா விமானம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக  வானில் வட்டம் அடித்து பின்பு தரையிறங்கின.

56
Government bus

ரயில்வே தரைப்பாலத்தில் சிக்கிய அரசு பேருந்து 

திருவள்ளூர் பொன்னேரியில் கோடை மழையின்போது ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியது. இதில் அவ்வழியே வந்த அரசுப்பேருந்து சிக்கிய நிலையில், பயணிகள் உடனடியாக கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர்.
 
66
Sudden rain

திடீர் மழைக்கு என்ன காரணம்?

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுதால் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories