ஷாக்கிங் நியூஸ்! சென்னையில் ஜிம் பயிற்சியாளரால் துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்! கதறிய குடும்பம்! நடந்தது என்ன?

Chennai Youth Died At Gym Reason: சென்னையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த இளைஞர் ஊக்க மருந்து செலுத்தியதால் உயிரிழந்தார். 

Youth dies after taking nutritional supplements at gym in Chennai tvk
Chennai youth

உடற்பயிற்சி மேற்கொண்ட இளைஞர்

சென்னை காசிமேடு ஜீவரத்னம் நகரைச் சேர்ந்தவர் ராம்கி (35). இவர் காலடிப்பேட்டையில் உள்ள ஜிம்மில் 6 மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும், உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வதற்காக பயிற்சியாளர் பரிந்துரையின் பேரில் ஊக்க மருந்தை ஊசியாக தொடர்ந்து செலுத்திக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

Youth dies after taking nutritional supplements at gym in Chennai tvk
Kidney Failure

திடீரென உடல்நலக்குறைவு

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் ராம்கிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மருத்துவர்கள் ராம்கியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் நாளை மின்தடை இருக்கா? இல்லையா? வெளியான தகவல்!


chennai youth death

இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறிய அழுதனர்.

Police investigation

காவல் நிலையத்தில் புகார்

இதுகுறித்து காவல்நிலையத்தில் ராம்கி குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தவறான மருத்தைப் பரிந்துரைத்த ஜிம் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது. இதனையடுத்து புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க:  காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா? தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை நியூ அப்டேட்!

Gym Supplements

மனைவியுடன் கருத்து வேறுபாடு

உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் தேவையில்லாத மாத்திரை மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்கிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

vuukle one pixel image
click me!