வீட்டை வாடகைக்கு கொடுக்க விரும்பும் உரிமையாளர்களை குறிவைத்து, சமீபத்தில் ஒரு புதிய வகையான மோசடிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு ஜிஎஸ்டி நிபுணர்கள் சங்கம் இது குறித்து எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீட்டை வாடகைக்கு கொடுக்க விரும்பும் உரிமையாளர்களை குறிவைத்து, புதிய வகையான மோசடி நடந்து வருகிறது. குத்தகைதாரர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடித்து, சட்டப்படி ஒப்பந்தம் செய்து, 1 அல்லது 2 மாதங்களுக்கு முன்பணம் செலுத்துகிறார்கள். இவை எல்லாம் முறையாகத் தெரிந்தாலும், பின்னர் அந்த வீட்டு முகவரியை போலி ஜிஎஸ்டி பதிவுக்குப் பயன்படுத்துகிறார்கள் என தமிழ்நாடு ஜிஎஸ்டி நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கிறது.
25
Chennai house rent frauds
வீட்டை வாடகைக்கு கொடுக்க விரும்பும் உரிமையாளர்களை குறிவைத்து, புதிய வகை மோசடி தற்போது நடைபெற்று வருகிறது. வாடகைக்கு வருவோர், நம்பத்தகுந்த குத்தகைதாரர்களாக நடித்து, சட்டப்படி ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். பாதுகாப்பு தொகையாக ஒரு மாதம் அல்லது இரண்டு மாத வாடகையை முன்கூட்டியே செலுத்துகிறார்கள். இதனால் அவர்கள் உண்மையான வாடையாளர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.
வீட்டை சில நாட்களில் அமைதியாக காலி செய்து விட்டு, உரிமையாளரிடம் எந்த சந்தேகமும் ஏற்படாமல் செய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் வாடகை செலுத்தியிருக்கிறார்கள், எந்த பிரச்சனையும் ஏற்படுத்தவில்லை என்பதால் உரிமையாளர் அமைதியாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். ஆனால், உண்மையான பிரச்சனை அதன் பிறகே தொடங்குகிறது.
35
Chennai house rent frauds
இந்த போலி குத்தகைதாரர்கள், வீட்டின் முகவரியை வைத்துக் கொண்டு போலி ஜிஎஸ்டி பதிவு செய்கிறார்கள். அதாவது அந்த முகவரியில் ஒரு நிறுவனமுள்ளது எனக் காட்டி, அதன் பெயரில் ஜிஎஸ்டி எண்ணைப் பெறுகிறார்கள். பின்னர் அந்த முகவரியை வைத்து அவர்கள் வர்த்தகம் செய்கிறார்கள், ஆனால் வரியை செலுத்தாமல் செயற்படுகிறார்கள். சில நேரங்களில், அந்த முகவரியை வைத்து போலி பில்லுகள் உருவாக்கி, சட்டவிரோதமான வரிவிலக்குகளையும் (ITC) பெறுகிறார்கள்.
இத்தகைய மோசடிகள் குறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் நேரில் சென்று சோதனை செய்தால், உரிமையாளருக்கே முதலில் நோட்டீஸ் வரும். அவர் அதுபற்றி எதுவும் அறியவில்லை என சொன்னாலும், சரியான ஆவணங்கள் இல்லையெனில் பிரச்சனை அவர்மீதே விழும். வீட்டு முகவரி அவரிடம் இருந்துதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதால், அது மோசடிக்காரரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்க உரிமையாளர் தடுமாற நேரிடும்.
45
Chennai house rent frauds
இந்த வகையான மோசடி நேரடி வரி மோசடியாக இருந்தபோதிலும், சிக்கிக்கொள்வது வீட்டு உரிமையாளர்தான். அவர்கள் சட்டபூர்வமான ஆவணங்களை வைத்திருக்கவில்லை என்றால், அரசு நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படலாம். மோசடிக்காரர்கள் போலி ஆவணங்கள் மற்றும் அடையாளங்கள், தவிர்க்க முடியாத மொபைல் எண்கள் பயன்படுத்துவதால், அவர்களை பிடிப்பது கடினமாகும்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் வீட்டு உரிமையாளர்கள் சில முக்கியமான முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஒப்பந்தம் கண்டிப்பாக எழுத்துப்பூர்வமாகவும், பதிவு செய்யப்பட்டு இருக்கவும் வேண்டும். அதில் "இந்த வீடு குடியிருப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்", "வணிக நோக்கத்தில் பயன்படுத்த அனுமதி இல்லை", "ஜிஎஸ்டி பதிவு செய்ய அனுமதியில்லை" ஆகிய நிபந்தனைகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஒப்பந்தத்தில் வாடகையாளரின் கையொப்பம், தேதி உள்ளிட்ட விவரங்களும் இருக்க வேண்டும்.
55
Chennai house rent frauds
மேலும், வாடகையாளரிடம் ஆதார் அட்டை, பான் கார்டு, வேலை பற்றிய விவரங்கள், நிரந்தர முகவரி ஆகியவற்றையும் பெற்றுக் கொண்டு, அவற்றின் நகல்களை ஒப்பந்தத்துடன் இணைத்து வைத்திருக்க வேண்டும்.
இந்தவகை எளிய நடவடிக்கைகள், உங்கள் வீட்டையும், சட்ட ரீதியான பாதுகாப்பையும் உறுதி செய்யும். சமூகத்தில் வளர்ந்து வரும் இத்தகைய வாடகை மோசடிகளை அடையாளம் காணவும், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த தகவல்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் சட்டபூர்வமாக தங்களை பாதுகாப்பது எளிதாகும்.