MGNREGA Allocation: மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
2024-25ஆம் நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக இருக்கும்.
MGNREGA Allocation
இந்தியாவின் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான முதன்மைத் திட்டமாக இருப்பது நூறு நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA). இந்தத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ86,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
MGNREGA Scheme
தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அந்தத் தொகை முழு பட்ஜெட்டில் உயர்ந்திருக்கிறது.
Budget for MGNREGA
மோடி அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்த பின்பு முதல் முழு பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2024-25ஆம் நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக இருக்கும் எனக் கூறியுள்ளது.
Nirmala Sitharaman on MGNREGA
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்ம்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட, நூறு நாள் வேலை திட்டம் இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிடத்தக்க பகுதியாக இருந்து வருகிறது.
MGNREGA 100 days work scheme
இந்தத் திட்டம் உடல் உழைப்பு பணிகளைச் செய்யும் கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டத்திற்கு பாஜக ஆட்சியில் தொடர்ந்து குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.