Rowdy Nagendran Son: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் சிறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் அஸ்வத்தாமன் மற்றும் அஜித்ராஜூக்கு இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ஜாமீன் மற்றும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். வேலூர் சிறையில் இருந்தே நாகேந்திரன் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்து மகன் அசுவத்தாமன் மூலம் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது தெரியவந்தது. இதில், நாகேந்திரன் ஏ1 குற்றவாளியாகவும், ஏ2 குற்றவாளியாக அவரது மகன் அஸ்வந்தாமன் மற்றும் பொன்னை பாலு உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.
25
நாகேந்திரன் உயிரிழப்பு
இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். இதனால், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரது மகன் அஸ்வத்தாமன் மற்றும் அஜித்ராஜூவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
35
அஸ்வத்தாமன் இடைக்கால ஜாமீன்
இந்நிலையில், தன்னுடைய தந்தையின் மரணத்தை தொடர்ந்து, அதன் பிறகு நடக்க உள்ள காரியங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் தனக்கு 15 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அக்டோபர் 28ம் தேதி வரைக்கும் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் நாகேந்திரனின் 16-ம் நாள் காரியம் நாளை நடைபெற உள்ளதால் சிறையில் உள்ள அவருடைய இளைய மகன் அஜித்ராஜூக்கு இரண்டு நாட்கள் பரோல் வழங்கும்படி நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித்ராஜூக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
55
அஜித் ராஜுக்கு பரோல்
அப்போது மனுதாரர் தரப்பில் மனிதாபிமான அடிப்படையில் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அஜித்ராஜூக்கு அக்டோபர் 26-ம் தேதி ஒருநாள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள அஜித் ராஜுக்கு, நாகேந்திரனின் இறுதிச் சடங்கில் அவரின் சடலத்திற்கு முன்பாக திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.