Coimbatore Car Accident: கோவை செட்டிப்பாளையம் அருகே அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
24
நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடு இடிபாடுகளில் சிக்கிய படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 4 இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
34
போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் பிரகாஷ்(22), ஹரிஷ்(22), சபரி(21), அகத்தியன்(20) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இதில், பிரபாகரன் (19) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மதுபோதையில் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.