சென்னையில் கரையை கடக்கப்போகிறதா புயல்? மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் ட்விஸ்ட்

Published : Oct 25, 2025, 08:00 AM IST

வங்கக் கடலில் உருவாகும் 'மொந்தா' புயல் ஆந்திராவை நோக்கிச் செல்லும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்திற்கு பெரிய அளவில் கனமழை இருக்காது என்றும், சென்னைக்கு புயல் நெருங்கி வந்தால் மட்டுமே கனமழை பெய்யும்.

PREV
15
மொந்தா புயல்

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று வங்க கடல் பகுதியில் வரும் 27ம் தேதி புயலாக உருவாகக்கூடும். புதிதாக உருவாகும் புயலுக்கு மொந்தா (Montha) என பெயரிடப்படப்பட்டுள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகும் புயல் தமிழகத்தை தாக்குமா? எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற தகவல் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

25
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மொந்தா புயல் 99.99999 சதவீதம் ஆந்திராவை நோக்கிச் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. இது கரையைத் தொடும் பகுதி ஆந்திர மாநிலமாக இருக்கும். இது புயலாக வலுப்பெற வாய்ப்புகள் அதிகம். அப்படி அதன் தீவிரம் அதிகரிக்கும்போது லிஸ்டில் உள்ள வரிசையின்படி அந்த புயலுக்குப் பெயர் கிடைக்கும். அடுத்து உருவாகும் புயல்களுக்கு சூட்டப்பட இருக்கும் பெயர்கள்: மொந்தா, சென்யார், திட்வா, அர்னாப், முரசு, அக்வான், காணி ஆகும். இந்த வரிசையில் அடுத்து வரும் புயலுக்கு மொந்தா என்ற பெயர் சூட்டப்படும்.

35
கனமழை இருக்காது

இந்த புயல் சின்னம் வட தமிழகத்தின் நிலபரப்புக்கு வாராமல் கடலிலேயே நோக்கிச் செல்லும் போது கேடிசிசி (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) பகுதிக்கு அதிகக் கனமழை இருக்காது. இப்படிக் கடல் நடுவே திசைமாறிச் சென்றால் சாதாரண மழை மட்டுமே பெய்யும். புயல் வட தமிழக கடற்கரைக்கு மிக அருகில் வந்து, அதன் பிறகு ஆந்திராவை நோக்கித் திரும்பினால், சென்னைக்கு மட்டும் கனமழை பெய்யும். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இது குறித்து நமக்கு தெளிவு கிடைக்கும்.

45
நவம்பர் முதல் வாரம் மழை தீவிரமாக இருக்காது

தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டங்களுக்கும் இந்த புயலால் கனமழை கிடைக்குமா என கேட்டால் கிடைக்காது என்பதே பதிலாகும். இந்த புயல் ஆந்திராவை நோக்கிச் செல்வதால், மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது. கேரளாவில் மழை பெய்யும், கன்னியாகுமரி மற்றும் நீலகிரியிலும் இழுவிசை காரணமாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நாட்களாகும். இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்த பிறகு, தமிழகத்தில் அடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வரை மழை பெய்வதில் பெரிய இடைவெளி இருக்கும். நவம்பர் முதல் வாரம் மழை தீவிரமாக இருக்காது. அதாவது மழை பெய்யும், ஆனால் அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும். வட தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரை மீனவர்கள் அக்டோபர் 25 முதல் 28 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

55
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நேற்று போலவே கன்னியாகுமரியில் இன்றும் மிக அதிக மழை பெய்யும். மேற்கு திசைக் காற்றின் காரணமாக நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வால்பாறை மற்றும் நீலகிரி (பந்தலூர் - அவலாஞ்சி பகுதிகள்) உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்யும். டெல்டா பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories