விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய அறிவிப்பு.! தேதி அறிவித்த தமிழக அரசு

Published : Oct 25, 2025, 07:21 AM IST

central government team inspection for paddy : பருவமழை காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், கொள்முதல் ஈரப்பத வரம்பை  உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய அரசின் நிபுணர் குழுவினர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்யவுள்ளனர்.

PREV
14

தமிழகத்தில் இந்தாண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் 5.65 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மாவட்டங்களில் மட்டும் சுமார் 14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பருவமழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

24

இதனையடுத்து நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை அதிகரிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து மத்திய அரசு குழுவினர் இன்று முதல் தமிழகத்தில் நேரடியாக ஆய்வு நடத்தவுள்ளனர். 

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கான குறுவை பருவ நெல் கொள்முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கி 1,839 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

34

இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவினை 17% லிருந்து 22% வரை அதிகரிக்க தமிழ்நாடு அரசால் கடந்த 19.10.2025 அன்று ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

அதனை தொடந்து, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்திட மூன்று நிபுணர் அடங்கிய குழுக்களை நியமித்து ஆணையிடப்பட்டுள்ளது. அந்நிபுணர் குழு நாளை (25.10.2025) முதல் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

44

அதன்படி முதல் குழு 25.10.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும், 26.10.2025 அன்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், இரண்டாவது குழு 25.10.2025 அன்று தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 

26.10.2025 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 27.10.2025 அன்று கடலூர் மாவட்டத்திலும் மற்றும் மூன்றாவது குழு 25.10.2025 அன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் 26.10.2025 அன்று மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர் என தெரித்துக்கொள்ளவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories