சென்னை மடிப்பாக்கம் பகுதிகளில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில், இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ராஜா மற்றும் லத்தீப் என்ற இரண்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண் மத்திய குற்றப்பிரிவு விபாச்சார தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகர் எட்டியப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து, கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
24
பாலியல் புரோக்கர்
இதனையடுத்து வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பாலியல் புரோக்கர் ராஜா(55) கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் மடிப்பாக்கத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
34
அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை
அதாவது மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த லத்தீப்(31) என்பவர் இளம் பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் லத்தீப்பை படித்து விசாரணை நடத்திய போது, லத்தீப் ஏற்கனவே பல்வேறு பாலியல் புரோக்கர்களிடம் உதவியாளராக பணியாற்றியதும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் தனியாக பாலியல் தொழில் தொடங்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து, லத்தீப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.