இந்நிலையில் சென்னை பெருநகர காவல் எல்லையில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்யும் நபர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகாவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் புரோக்கர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நெற்குன்றம் கோல்டலன் ஜார்ஜ் நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கல்லூரி மாணர்கள் பலர் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.