ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.. இவர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது!

Published : Apr 09, 2026, 11:19 AM IST

தமிழகத்தில் கல்வி ஆண்டு நடுவே ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் நலன் கருதி மே மாதம் வரை வழங்கப்படும் பணி நீட்டிப்பு மற்றும் ஊதியம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

PREV
15
அரசு பள்ளி ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தையும் சேர்த்து மொத்தம் சுமார் 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் சுமார் 3.12 லட்சம் முதல் 4.5 லட்சம் ஆசிரியர்கள் (இதில் நிரந்தர ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அடங்குவர்). தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அவ்வப்போது ஏற்படும் ஓய்வு மற்றும் புதிய நியமனங்கள் (TRB மூலம்) காரணமாக இந்த எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

25
பள்ளிக்கல்வித்துறை

இந்நிலையில் அரசு பணியில் வேலை பார்த்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ஆண்டுகளான ஆசிரியர்களுக்கு கிடைத்திருந்த மே மாதம் ஊதியம் இனிமேல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது புதிதாக வந்த உத்தரவு அல்ல மூன்று ஆண்டு தாமதத்துக்கு பின் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

35
பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள்

பொதுவாக கல்வி ஆண்டு நடுவில் ஒரு ஆசிரியர் ஓய்வு பெறுகிறார் என்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக அந்த ஆண்டு முடியும் வரை அதாவது மே மாதம் முடியும் வரை பதவி நீட்டிப்பு கொடுப்பது வழக்கம். இதற்கான சம்பளமும் கிடைக்கும். ஆனால் அரசுக்கு பார்த்தால் கூடுதலாக நிதி இழப்பு ஏற்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறையின் தனிக்கை பிரிவு ஒரு அறிக்கையை கொடுத்துள்ளது. அதன்படி பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மே மாதம் நீட்டிப்பு வழங்க வேண்டாமென பரிந்துரைக்கப்பட்டது. இதில், பணி ஓய்வு பெறுவோர், அக்கல்வியாண்டில் தேர்வுப்பணிகள் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு கொடுத்து விட வேண்டும் என்று 2022ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

45
ஆசிரியர்கள் பணி நிறைவு

இந்த அரசாணை வெளியான பிறகு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அலுவலர்களுக்கு, பிரத்யேக செயல்முறைகள் அனுப்பப்படவில்லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, மே மாத ஊதியத்துடன் தான், மாநிலம் முழுக்க ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுகின்றனர்.

55
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

இதுகுறித்து, கல்வியாளர்கள் சிலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2025, ஜூன் 13ம் தேதி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மே மாதம் பணி நீட்டிப்பு செய்ய வேண்டாமென, செயல்முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதியிழப்பை தவிர்க்க கொண்டு வந்த அரசாணை விதிமுறைகளை செயல்படுத்த, மூன்று ஆண்டுகள் கால தாமதமாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது அரசாணையை அமல்படுத்துவதில், ஆசிரியர்களுக்கு நிலவிய சந்தேகங்கள் அடிப்படையில், அரசிடம் விளக்கம் பெற சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 30.5.2025ல் விளக்கம் பெறப்பட்டதால், செயல்முறைகள் சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பப்பட்டன என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories