Richest Candidate in Tamil Nadu Election 2026: சட்டமன்றத் தேர்தல் 2026-ல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.5,800 கோடியைத் தாண்டியுள்ளது. தேர்தல் வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையா? என்பது குறித்து பார்க்கலாம்.
TN Election 2026: ஒரே குடும்பம்.. ரூ.5,800 கோடி சொத்து
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடந்துமுடிந்துவிட்டது. இதனிடையே வேட்பாளர்கள் சமர்ப்பித்த சொத்து விவரங்கள் பொது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தப் பட்டியலில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தமிழகத்திலேயே மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
26
தமிழக தேர்தல் 2026 சொத்து விவரம்
லீமா ரோஸின் அசுர வளர்ச்சி லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் படி, இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.1,049.56 கோடி ஆகும். இதில் ரூ.139.62 கோடி அசையும் சொத்துக்களாகவும், ரூ.909.94 கோடி நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துக்களாகவும் உள்ளன. குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,800 கோடியைத் தாண்டுவது குறிப்பிடத்தக்கது. 6-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள இவர், தனது பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் 3 டிவிஎஸ் எக்ஸ்எல் மொபெட்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
36
டாப் 5 இடங்களைப் பிடித்தவர்கள்
பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் லீமா ரோஸைத் தொடர்ந்து திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ₹603 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
46
கார்த்திக் மோகன்
மூன்றாம் இடத்தில் திமுக சார்பில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் கார்த்திக் மோகன் ரூ.209 கோடி சொத்துக்களுடன் உள்ளார். நான்காம் இடத்தில் லீமா ரோஸின் மருமகனும், தவெக வேட்பாளருமான (வில்லிவாக்கம்) ஆதவ் அர்ஜுனா ரூ.198 கோடி சொத்துக்களுடன் இடம்பிடித்துள்ளார். ஐந்தாம் இடத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்) ரூ.88 கோடி சொத்துக்களுடன் உள்ளார்.
56
அரசியல் களத்தின் புதிய முகம்
இந்தத் தரவுகளின்படி, முதல் ஐந்து இடங்களில் திமுக தரப்பிலிருந்து கார்த்திக் மோகன் மட்டுமே இடம் பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதேசமயம், லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார், அவரது சொத்து மதிப்பு ₹664 கோடியாக உள்ளது
66
5800 கோடி சொத்து வேட்பாளர்
தமிழகத் தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை கோடீஸ்வரர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சொத்து விவரங்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளன. சாதாரண மக்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் இடையிலான இந்த இடைவெளி ஜனநாயகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.