நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், இதனால் நிலச்சரிவு, மரங்கள் விழுதல் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24
பள்ளிகளுக்கு விடுமுறை, சுற்றுலா தளங்கள் மூடல்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து சுற்றுலா தலங்களும் செவ்வாய்க்கிழமை மூடப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
34
கனமழை - உதவி எண்கள் அறிவிப்பு
பொதுமக்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படும் பட்சத்தில் 1077 என்ற பிரத்யேக உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 0423-2450034, 2450035, மற்றும் 9488700588 (வாட்ஸ்அப்) ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
இதே போன்று தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக அரக்கோணத்தில் இருந்து மீட்பு படையினர் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.