Ration Card: ஜூன் 20-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்? மக்களே உடனே கடைக்கு போங்க!

Published : Jun 18, 2026, 08:58 AM IST

Ration Card Biometric Verification: நியாயவிலைக் கடைகளில் குளறுபடிகளை தவிர்க்கவும், கடை பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேரவும் பயோமெட்ரிக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 20 ம் தேதிக்குள் ரேகை பதிவை முடிக்க அறிவுறுத்தல்.

PREV
14
ரேஷன் அட்டைகள்

ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 2.20 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளன. இதில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்கள் என வெவ்வேறு பிரிவுகளில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றனர். நியாயவிலைக் கடைகளில் குளறுபடிகளை தவிர்க்கவும், கடை பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேரவும் பயோமெட்ரிக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது.

24
கைவிரல் ரேகை பதிவு

இந்த சூழலில் ரேஷன் அட்டையில் உள்ள பெயர்களை உறுதி செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி ரேஷன் அட்டையில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் நியாயவிலை கடைகளுக்கு வந்து விரல் ரேகையை பதிவு செய்து பெயர் இருப்பதை உறுதி செய்யவும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் கார்டு பயோமெட்ரிக் கைவிரல் ரேகை பதிவு ஜூன் 20 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் நாளை (18-06-2026) முக்கிய இடங்களில் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை.!

34
ஜூன் 20 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தற்போது வரை கைவிரல்ரேகையை பதிவு செய்யாதவர்கள் ஜூன் 20க்குள் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கை விரல் ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதாவது, குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருமே தங்களின் கைவிரல் ரேகையை பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய வேண்டும். அதனடிப்படையிலேயே பயனாளிகளின் எண்ணிக்கையை அரசு உறுதி செய்யும்.

44
உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம்

மேலும், மயிலாடுதுறை மாவட்ட குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் கை விரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை ஜூன் 20க்குள் பதிவு செய்து கொள்ளலாம். இறந்த உறுப்பினர்களின் பெயர்களை ஜூன் 20க்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்திட வேண்டும் எனவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories