Tiruvallur Government Jobs: திருவள்ளூர் மாவட்டத்தில், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பபட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
25
பணியிடங்கள் விவரம்
திருவள்ளூர் tiruvallur.nic.in-ல் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதள மாவட்ட முகவரி இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரியில் ஜூன் 22ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்
திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், தொழில்நுட்ப பணியாளர், பல்நோக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 7 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
35
வழக்கு பணியாளர் பணி
வழக்கு பணியாளர் பணிக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை, சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) / உளவியல் (Psychology) / சட்டம் (Law) போன்றவற்றில் (Under Graduation Degree) பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதியுள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.18,800 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bachelors degree with a diploma in computers/IT போன்ற கல்வி தகுதியுடன், அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் தேவை. (தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்). 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தினை சேர்ந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
55
பல்நோக்கு உதவியாளர் பணி
எழுத படிக்க மற்றும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.10,000 வழங்கப்படும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் (Shift) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தினை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர் கொள்ள வேண்டிய முகவரி
மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 2வது தளம், திருவள்ளூர் மாவட்டம் - 602001 என்ற முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044 29896049 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.