Vandalur Zoo: வண்டலூர் பூங்காவில் பொதுமக்களுக்கு இலவசம்.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் பரிசு!

Published : Jun 18, 2026, 07:55 AM IST

Vandalur Zoo: முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னை வண்டலூர் பூங்காவில் 2 நாட்கள் பொதுமக்கள் இலவசமாக செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
வண்டலூர் பூங்காவில் பொதுமக்களுக்கு இலவசம்

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் வரும் ஜூன் 22-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி தரும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் வெளியிட்டுள்ளார். அதாவது வண்டலூர் பூங்காவில் இரண்டு நாட்கள் பொதுமக்களுக்கு இலவசம் என்று தெரிவித்துள்ளார்.

24
எந்தெந்த பூங்காக்களுக்கு இலவசம்?

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இரஞ்சித்குமார், ''முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், வரும் ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூன் 22 (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் மூன்று முக்கிய வன உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்களுக்குக் கட்டணமில்லா இலவச அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டம் அமிர்தி உயிரியல் பூங்கா, சேலம் மாவட்டம் குரும்பட்டி உயிரியல் பூங்காவில் பொதுமகக்ள் 2 நாட்கள் இலவமாக செல்லலாம்.

34
கிண்டி சிறுவர் பூங்காவில் இலவசம் ஏன் இல்லை?

அதே வேளையில் சென்னையிலுள்ள கிண்டி சிறுவர் பூங்காவிற்கு பொதுமக்களுக்கு 2 நாட்கள் இலவசம் என அறிவிக்கப்படவில்லை. இது குறித்து விளக்கிய அமைச்சர், ''கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா பரப்பளவில் சிறியது. அங்குள்ள பாதைகளும் குறுகலானவை. வார இறுதி நாட்களிலும், முதல்வர் பிறந்தநாளிலும் இலவச அனுமதி அளித்தால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி நெரிசல் ஏற்படலாம். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு கிண்டி பூங்காவிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மற்ற மூன்று பெரிய பூங்காக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

44
டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாமா?

பூங்காக்களில் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்களின் இலவச நுழைவுச் சீட்டுகளை (Entry Tickets) ஆன்லைன் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச அனுமதியால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்துப் பேசிய அமைச்சர், ''இந்த இரண்டு நாட்களுக்கான ஒட்டுமொத்த பூங்கா கட்டணத் தொகையான சுமார் 70 லட்சம் ரூபாயை அரசுக்கு சுமையாக மாற்றாமல், எங்கள் குடும்ப அறக்கட்டளையான 'வாழ் முனி நாயக்கர் அறக்கட்டளை' மூலமாக நாங்களே முழுமையாகச் செலுத்திவிடுவோம். எங்கள் ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருந்த தெய்வக் குழந்தைகளும், அவர்தம் குடும்பத்தினரும் முதலமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாட எங்களுடைய சிறு பரிசு இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories