பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணிக்கு இடையே அதிகார மோதல் உச்சமடைந்துள்ளதால் அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. கட்சிக்கு உரிமை கோரி இரண்டு தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 25 முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் நடத்தப்படும் என அன்புமணி அறிவித்திருந்தார். இந்த சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் தனது அனுமதி இல்லாமல் கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.