மகளிர் உரிமை தொகை கேட்டு 2.50 லட்சம் மனு.! 45 நாட்களில் அக்கவுண்டில் வந்து விழப்போகுது பணம்-குஷியான தகவல்

Published : Jul 24, 2025, 12:10 PM IST

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், ஜூலை 15 முதல் நவம்பர் 15, 2025 வரை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது. 

PREV
14

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 2023 செப்டம்பர் 15 அன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெண்களின் உழைப்பை அங்கீகரிப்பதையும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சுயமரியாதையுடன் வாழ வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இத்திட்டத்திற்கு 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்தனர், இதில் 1.06 கோடி பயனாளிகள் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது சுமார் 1.16 கோடி பெண்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.

24

மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் இருக்க வேண்டும், ஆண்டுக்கு 3,600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் தகுதியுடையவை என தெரிவிக்கப்பட்டிருந்தது. கைம்பெண்கள், திருநங்கைகள், மற்றும் தனித்த பெண்கள் தலைமையிலான குடும்பங்களும் தகுதி பெறலாம் என கூறப்பட்டது.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள் தகுதியற்றவை என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

34

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்தது. இதனையடுத்து உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 15 முதல் நவம்பர் 15, 2025 வரை தமிழகம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், 

இதில் 3,768 முகாம்கள் நகர்ப்புறங்களிலும், 6,232 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய முகாமில் 43 திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெற்று வருகிறார்கள். நேற்று வரை 6 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் சுமார் 2.50 லட்சம் விண்ணப்பங்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

44

இதனையடுத்து மற்ற கோரிக்கைகள் தொடர்பான மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வரும் நிலையில், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பெறப்பட்ட இந்த விண்ணப்பத்தின் மீதான பரிசீலனை தற்போது தொடங்கியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், 

மகளிர் உரிமை தொகை தொடர்பாக விண்ணப்பங்களின் மீதான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 45 நாட்களுக்குள் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா.? அல்லது நிராகரிக்கப்பட்டதா.? என்ற விவரம் தெரிவிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories