பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது. ராமதாஸ் மகன் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக அரசியல் அரங்கை அதிர வைத்தார். இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதன்பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என தொடர் அறிவிப்புகள் வெளியிட்டு வந்தன. குறிப்பாக தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.