திருமணத்திற்கு இலவசமாக 8 கிராம் தங்க நாணயம்.! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு- வெளியான அறிவிப்பு

Published : Sep 10, 2025, 12:15 PM IST

தமிழக அரசு திருமண உதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்குகிறது. தற்போது 5,640 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

PREV
14
தமிழக அரசின் திருமண உதவி திட்டங்கள்

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருமண உதவி திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை மூலம் நான்கு முக்கிய திருமண உதவி திட்டங்களை செயல்படுத்துகிறது. 

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

24
திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்

இந்த திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையாக 25 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரையும் 8கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் நடைபெறும் திருமண உதவி திட்டங்களுக்கு தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யும் வகையில் டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூக நல இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க தேவைப்படும் 5,640 (ஐந்தாயிரத்து அறுநூற்று நாற்பது மட்டும்) எண்ணிக்கையிலான 8 கிராம் - 22 காரட் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
5,640 தங்க நாணயம் வாங்கும் தமிழக அரசு

எனவே தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தியாளர்கள் / விற்பனையாளர்கள், தங்க ஆபரணங்கள் /தங்க நாணயங்கள் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களிடமிருந்து மின் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒப்பந்தப்புள்ளி படிவம் 10.09.2025 முதல் 09.10.2025 மாலை 03.00 மணி வரை பெறப்படும். ஒப்பந்தப்புள்ளிகள் 09.10.2025 அன்று மாலை 04.00 மணியளவில் மேற்கண்ட விலாசத்தில் ஒப்பந்தப்புள்ளி கூர்ந்தாய்வு குழுவால், சமூக நல இயக்குநர் முன்னிலையில் சமூக நல இயக்குநரகம், சென்னை-05-ல் திறக்கப்படும். 

44
ஒப்பந்தப்புள்ளிகள் கோரிய தமிழக அரசு

ஒப்பந்தப்புள்ளி படிவத்தினை https://tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து 10.09.2025 முதல் 09.10.2025 பிற்பகல் 01.00 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

EMD தொகை ரூ.45,12,000/-னை (ரூபாய் நாற்பத்து ஐந்து இலட்சத்து பன்னிரெண்டாயிரம் மட்டும்) இணையதளத்தின் வாயிலாக (online gate payment) மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முன்கூட்டம் (Pre-bid meeting) 23.09.2025 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது எனவும், மேலும் இதர நிபந்தனைகள் ஒப்பந்தப்புள்ளி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories