ரூட்டு போட்டு கொடுத்த அமித்ஷா..? உட்கார்ந்த இடத்தில் செய்து முடிக்கும் செங்கோட்டையன்..? KAS வீட்டில் குவியும் அதரவாளர்கள்

Published : Sep 10, 2025, 11:46 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இல்லத்திற்கு இரண்டு சக்கர வானத்தில் பேரணியாக வந்த அதிமுகவினர் செங்கோட்டையன் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

PREV
14
தலைமைக்கு கெடு விதித்த செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், பிரிந்து சென்றவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும். இந்த ஒருங்கிணைப்பு பணி 10- நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்ற அதிமுக தலைமைக்கு கெடு விதித்து இருந்தார்.

24
அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்

இந்த நிலையில் செங்கோட்டையனின் அனைத்து வகையான கட்சி பதவி மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் ஹரித்துவார் சென்று ராமரை தரிசிக்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வலியுறுத்தி பேசியதாக தெரிவித்திருந்தார்,

34
ஒன்றிணைப்புக்கு வலியுறுத்திய செங்கோட்டையன்

அந்த சந்திப்பில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் கட்சி ஒன்றுபட வேண்டும் வெளியே சென்றவர்களை அரவணைத்தாள் மட்டுமே 2026- தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷவிடம் சும்மர் 45 நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
செங்கோட்டையன் வீட்டில் குவியும் நிர்வாகிகள்

இந்த நிலையில் கோவையில் இருந்து அமுமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவரை அவரது வீட்டில் சந்தித்து உள்ளனர். இன்று காலையில் கோபிசெட்டிபாளையம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் இரண்டு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து செங்கோட்டையன் இல்லத்தில் அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியின் பொதுச் செயலாளர் 10 தினங்களில் இணைக்கும் பணியில் ஈடுபடவேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் அந்த பணியை நான் மேற்கொள்வேன் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் அந்த பணியை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories