இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, கோவை குனியமுத்தூர் தொகுதி மக்களிடம் உரையாற்றுகையில் MLA எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சி SP வேலுமணி தான் என்றார். அதிமுக மக்கள் கட்சி, திமுக கருணாநிதி குடும்பத்தின் கட்சி. அதிமுகவில் உழைப்பவர்கள், தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்புக்கு வரமுடியும். திமுகவில் அப்படி வரமுடியுமா? கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்து இப்போது இன்பநிதியாம். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். அதிமுகவில் சாதாரண நபர்கூட முதல்வராகலாம். திமுகவில் இப்படி ஸ்டாலின் சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.