ஆசிரியர்களே அலர்ட்.! இன்று தான் கடைசி நாள்- கெடு விதித்த தமிழக அரசு

Published : Sep 10, 2025, 11:23 AM IST

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2025 நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான தேதிகள், தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே.

PREV
14
ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கு நடத்தப்படும் ஒரு முக்கியமான தேர்வாகும். இது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு முதன்மை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தேவையான தகுதியை உறுதி செய்ய உதவுகிறது. 

2022-க்கு பிறகு மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாத இத்தேர்வு, உச்சநீதிமன்ற உத்தரவால் 2025-ல் நடத்தப்படுகிறது. இதுவரை சுமார் 3.80 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

24
ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எப்போது.?

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தாள்-I, முதன்மை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, D.El.Ed அல்லது அதற்கு இணையான தகுதி தேவையாகும். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தாள்-II, இடைநிலை ஆசிரியர் பணிக்கு B.Ed அல்லது அதற்கு இணையான தகுதி தேவையாகும்,  எனவே ஆசிரியர்கள் தகுதி தேர்வு  நவம்பர் 15, 2025 (தாள்-1) மற்றும் நவம்பர் 16, 2025 (தாள்-2).

34
ஆசிரியர்கள் தேர்வு மதிப்பெண் விவரம்

ஆசிரியர்கள் தகுதி தேர்வில் மொத்தம் 150 கேள்விகள் (MCQ வகை), 150 மதிப்பெண்கள்)

தேர்வு கால அளவு: 2.5 மணி நேரம்.

மொழி: தமிழ், ஆங்கிலம், மற்றும் பிற மொழிகள் (விருப்பம்).

தேர்ச்சி: 60% மதிப்பெண்கள் (SC/ST/MBC/OBC-க்கு 55%).

44
ஆசிரியர் தகுதி தேர்வு- விண்ணப்ப விவரங்கள்

விண்ணப்ப விவரங்கள்

 ஆன்லைன் விண்ணப்பம்: www.trb.tn.gov.in அல்லது https://trb1.ucanapply.com வழியாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவு - ரூ.600; SC/ST/மாற்றுத்திறனாளிகள் - ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கடந்த 8ஆம் தேதி காலஅவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், அன்று ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் விண்ணப்பிக்க முயன்றதால் இணையதளம் செயல்படாமல் முடங்கியது. 

இதனையடுத்து ஆசிரியர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. கூடுதலாக இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து விண்ணப்ப காலக்கெடு: இன்று (செப்டம்பர் 10, 2025) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories