தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! வானிலை மையம்!

Published : Jul 11, 2025, 10:07 AM IST

பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். வெளியில் செல்லும் சிலர் மழைக்கு பதிலாக வெயிலின் தாக்கத்தால் குடையை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.

PREV
15
சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். வெளியில் செல்லும் சிலர் மழைக்கு பதிலாக வெயிலின் தாக்கத்தால் குடையை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.

25
நேற்று 8 இடங்களில் சதம் அடித்த வெயில்

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் - 104 டிகிரி பதிவாகி இருந்தது. அதேபோல் மதுரை நகரம் - 103 டிகிரி, ஈரோடு - 101 டிகிரி, வேலூர் - 101 டிகிரி, நாகை - 101 டிகிரி, கடலூர் - 101 டிகிரி, திருச்சி - 100 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் - 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

35
லேசானது முதல் மிதமான மழை

இந்நிலையில் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எச்சரித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

45
வானிலை மையம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

55
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இதனிடையே தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நெல்லை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories