10ஆயிரம் ரூபாயை அள்ளிக்கொடுக்கும் அரசு.! இந்தியாவிற்குள் புனித பயணம் செல்ல - உடனே விண்ணப்பிங்க

Published : Jul 11, 2025, 08:32 AM IST

தமிழக அரசு சிறுபான்மையினரின் புனித பயணங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. ஜெருசலேம் பயணத்திற்கு ரூ.20,000 மற்றும் இந்தியாவிற்குள் ரூ.10,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

PREV
14
தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் ஆன்மிக தளங்களுக்கு செல்ல முடியாத மக்களுக்கு உதவிடும் வகையில் இலவசமாகவும், நிதி உதவியும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை தரிசிக்கும் வகையில் சுற்றுலா திட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்தர்களை இலவசமாக அழைத்து செல்லும் திட்டம் என பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

அந்த வகையில் தமிழக அரசு சிறுபான்மை மதத்தினரின் புனித பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புனித யாத்திரைகளை எளிதாக்குவதற்காகவும், சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிப்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ஒருவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.

24
புனித பயணம் செல்ல நிதியுதவி

மேலும் தமிழக அரசு சிறுபான்மை மதத்தினருக்கு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜைனர்கள் இந்தியாவிற்குள் புனித பயணம் மேற்கொள்ள ரூ.10,000 நிதி உதவி வழங்குகிறது. எனவே புனித பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மத புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 இலட்சம் நிதி உதவி அளித்து வருகிறது.

34
புனித பயணம் செல்பவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

01.07.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.

44
புனித பயணம்- தகுதிகள் என்ன.?

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 60 வயது வரை.

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த உதவியைப் பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு முறை மட்டுமே நிதி உதவி பெறலாம்.

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வருமானச் சான்றிதழ், மதச் சான்றிதழ், வயது சான்று மற்றும் பயண விவரங்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலகமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 30.11.2025

Read more Photos on
click me!

Recommended Stories