சென்னை மின்சார ரயிலில் இன்று போறீங்களா? அப்படினா! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Published : Jul 11, 2025, 09:18 AM IST

சென்னை எழும்பூர்-விழுப்புரம் ரயில் பாதையில் சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

PREV
15
ரயில் சேவை

நாடு முழுவதும் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.  60,000 கி.மீ. தொலைவுக்கு பரவியுள்ள பாதைகளில் தினமும் 11,000 ரயில்களை இயக்குகிறது. சுமார் 1.3 கோடி பயணிகளுக்கு சேவை அளிக்கிறது. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால் பேருந்து சேவவையை விட அதிகளவில் ரயில் சேவையை விரும்புகின்றனர்.

25
மின்சார ரயில் சேவை

குறிப்பாக தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எந்தவொரு டிராபிக் இல்லாமலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகங்களுக்கு சென்றடைய முடியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.

35
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்புக்காக அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் குறித்து தெற்கு ரயில்வே முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

45
தெற்கு ரயில்வே

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: செங்கல்பட்டில் இருந்து இன்று காலை 10.40, 11, 11.30, மதியம் 12, 1.10 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும், காஞ்சிபுரத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் செங்கல்பட்டு-கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

55
சிறப்பு ரயில்கள்

காலை 10.13 மணிக்கு காட்டாங்கொளத்தூர்-கும்மிடிப்பூண்டி, காலை 10.46, 11, 11.20, மதியம் 12.20 மணிக்கு காட்டாங்கொளத்தூர்-சென்னை கடற்கரை, காலை 11.30, மதியம் 1.10 மணி செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories