சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தர வேண்டும். கூடுதல் சீட் தர வேன்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது. ராகுல் காந்தி இதை கனிமொழியிடமும் கூறியதாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஆட்சியில் பங்கு தர முடியாது என கனிமொழி திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக மீது காங்கிரஸ் பொறுப்பாளர் அதிருப்தி
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை என காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஏற்கெனவே குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், ''கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காததால், திமுகவின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக அவர்களுக்காகக் காத்திருக்கிறோம்.
நாங்கள் நவம்பரில் ஒரு கூட்டணிக் குழுவை அமைத்தோம். டிசம்பர் 15-க்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து, கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஏன் இந்தத் தாமதம் என்று தெரியவில்லை. அவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் முடிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.