நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல்..
அதேபோல், மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்று சொன்னோம். சொன்னது போலவே, திமுக வெற்றிபெற்ற மறுநாளே, விடியல் பயணம் திட்டத்தில், பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரைக்கும், 13 ஆயிரத்து 387 கோடி ரூபாய் மதிப்பிலான 835 கோடிக்கும் அதிகமான பயணங்களை செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த திட்டத்தால் விளிம்பு நிலை மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுகிறது என்று தரவுகளோடு உணர்ந்து, திருநர்களுக்கும், மலைப்பகுதிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்தோம்.
நாங்கள் கொண்டு வந்த இந்த இரண்டு திட்டத்தையும், இப்போது பல்வேறு மாநிலங்களும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள், இதுதான் திராவிட மாடல், நாட்டிற்கே வழிகாட்டி என்பதற்கான அடையாளம்!