சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், வீட்டில் இருந்த பெண், அவரது உறவினர் மற்றும் வீட்டுப் பணியாளர் என மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டிடி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ஆட்சி இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பழனி பாதயாத்திரை செல்வதற்காக தனது சொந்த ஊரான டிடி நகர் வீட்டிற்கு வந்த லட்சுமி ஆட்சி தனது மகன்களை பழனி பாதையாத்திரைக்கு அனுப்பி வைத்துவிட்டு காரைக்குடியில் உள்ள தனது வீட்டில் தனது சித்தி மகள் தேவி மற்றும் வீட்டில் பணிபுரியும் நபருடன் தங்கியுள்ளனர்.
23
மூன்று பேர் படுகாயம்
இந்நிலையில் இன்று வீட்டில் பணிபுரியும் கருப்பு என்பவர் காலையில் சமையல் செய்துள்ளார். அப்போது சமையல் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். மேலும் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் மூடி இருந்ததால் சிலிண்டர் வெடித்ததில் அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவியது.
33
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை
இதில் லட்சுமி ஆட்சி மற்றும் அவரது அக்கா மகள் வீட்டில் பணிபுரியும் கருப்பு என அனைவரும் படுகாயம் அடைந்து அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.