லாரி லாரியாக தக்காளி, வெங்காயம்..! போட்டி போட்டு அள்ளும் இல்லத்தரசிகள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.?

Published : Oct 07, 2025, 08:34 AM IST

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
14
தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காய்கறிகள் தான். அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு தான் மக்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதற்காகவே மற்ற காய்கறிகளை விட தக்காளி, வெங்காயம் தான் மூட்டை, மூட்டையாக, பெட்டி பெட்டியாக லாரிகளில் குவித்து வருகிறது. 

இதற்கு ஏற்றார் போல காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயத்தின் விலையும் சரிந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டியது. இதே போல வெங்காயத்தின் விலையும் போட்டி போட்டு உயர்ந்தது.

24
சமையலும் தக்காளி, வெங்காயமும்

தற்போது மற்ற காய்கறிகளை விட தக்காளி, வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையானது சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 முதல் 25 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. 

100 ரூபாய்க்கு 4 முதல் 5 கிலோ வரை தக்காளி சென்னை கோயம்பேடு சந்தையில் கூவி கூவி விற்பனை செய்வதால் இல்லத்தரசிகள் பை நிறைய வாங்கி செல்கிறார்கள். இதே போல வெங்காயத்தின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

34
காய்கறிகள் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

44
இன்றைய காய்கறி விலை நிலவரம்

சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், 

பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Read more Photos on
click me!

Recommended Stories