இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS ( குவாக்கரெல்லி சைமண்டஸ்) தர வரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைகழகங்கள் / நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல் மருத்துவம்.சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல் மனித நேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப்பட்டப்படிப்பிற்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.