விஜய் ரசிகரை காதலிக்காதீங்க..! பொண்ணும் கொடுக்காதீங்க..! தலையில் அடித்து கதறும் வீரலட்சுமி

Published : Oct 07, 2025, 07:05 AM IST

விஜய் ரசிகர்களை காதலிக்காதீர்கள், அவர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள் என தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

PREV
14
தவெக.வுக்கு எதிராக மனு அளித்த வீரலட்சுமி

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் மரணம் தொடர்பான விசாரணை நடைபெறுவதற்கு தடையாக இருக்கும் நபர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி மனு அளித்தார்.

24
சமூக வலைதளங்களில் அவதூறு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கரூரில் தனிமனிதனால் 41 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்காத வகையில் ஒருசிலர் சமூக வலைதளப் பக்கங்களில் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

34
சவுக்கு சங்கரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

குறிப்பாக ஹரிநாடார், சவுக்கு சங்கர், நேதாஜி மக்கள் கட்சியைச் சேர்ந்த வரதராஜன் உள்ளிட்டோர் அடிப்படை ஆதாரங்கள் இன்றி தொடர்ந்து நீதித்துறை குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.

44
விஜய் ரசிகர்களை காதலிக்காதீர்கள்

குழந்தைகள், பெண்கள் உட்பட பலரது மரணத்திற்கு காரணமாக இருந்த நபர்களுக்கு தமிழக மக்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும். விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள், பெண் எடுக்காதீர்கள். விஜய் ரசிகர்களை காதலிக்கவும் வேண்டாம். அது தான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை. விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுத்தால் புகை பிடிப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள்.

ஹேமமாலினி கரூருக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். முதலில் அவருக்கு நம் மொழி தெரியுமா? நம் மொழியே புரியாத அவருக்கு நம் வலி எப்படி புரியும்..? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

Read more Photos on
click me!

Recommended Stories