இன்று இத்தனை இடங்களில் மின் தடையா.? வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க

Published : Jun 16, 2025, 06:43 AM IST

தமிழகத்தில் இன்று சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும்.

PREV
15
தமிழகத்தில் இன்று மின் தடை பகுதிகள்

மின்சாரம் தான் வாழ்வில் ஒரு அங்கமாக மாறி விட்டது. மின்சாரம் இல்லாமல் சமையல் முதல் ரயில்கள் வரை இயக்குவது வரை இயலாத நிலையாக உள்ளது. அனைத்து வகையான அடிப்படை தேவைக்கும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் தடை செய்யப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்று சென்னை, திருப்பூர். கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 9 மணி முதல் மதியல் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட இருப்பதாகவும் இதனை தொடர்ந்து 2 மணிக்கு பிறகு மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25
சென்னையில் மின் தடை பகுதிகள்

வேளச்சேரி பகுதியில் தேவ் பிளாட், அந்தோணியார் தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், சாய் கார்டன், விஜிபி செல்வ நகர் முழுவதும்.

நேரு நகர்: திரு.வி.க. நகர் மெயின் ரோடு, சர்வ மங்களா நகர், ஹரி டோஸ் புரம் மெயின் ரோடு, சத்ரபதி சிவாஜி தெரு ஆகிய பகுதிகள்.

பெரும்பாக்கம் - மேடவாக்கம் பகுதியில் சாந்தி நகர், ஆனந்தம்மாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், பெரும்பாக்கம்- குளோபல் மருத்துவமனை மெயின் ரோடு (ஒரு பகுதி) சேகரன் நகர், மாதா கோயில் தெரு, மசுதி தெரு, ராதா நகர், ராமையா நகர்.

35
தாம்பரத்தில் மின் தடை செய்யக்கூடிய இடங்கள்

 முல்லை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி, பழைய ஸ்டேட் வங்கி காலனி, காமராஜ் தெரு மற்றும் காந்தி சாலையின் ஒரு பகுதி அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், . புதிய காலனி: பிள்ளையார் கோயில் தெரு, சந்திரன் நகர், சிஎல்சி பணி சாலை.

மேடவாக்கம்- புஷ்பா நகர்: பெருமாள் கோயில் வளைவு, அப்பர் தெரு, பிள்ளையா கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, குள்ளக்கரை தெரு, தாவூத் நகர் 1 முதல் 3 தெரு பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு ஆகியவை.

45
திருப்பூர் மாவட்டம் மின் தடை பகுதிகள்

உடுமலை பகுதியில் ஐயர்பாடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, மற்றும் மானாம்பள்ளி ஆகிய இடங்கள்.

55
கோவை மற்றும் ஈரோட்டில் மின் தடை பகுதிகள்

கோவை நகரில் பட்டணம்புதூர், நாயக்கன்பாளையம், பீடம்பள்ளி ஒருபகுதி, காவேரி நகர், நெசவாளர் காலனி, சத்யநாராயணபுரம், ஸ்டேன்ஸ் காலனி, வெள்ளலூர் ஒருபகுதி, பட்டணம் ஆகிய பகுதிகள்.

ஈரோடு மாவட்டத்தில் அறச்சலூர், வீரப்பம்பாளையம், ஓடாநிலை, கஸ்தூரிபா கிராமம், வடபழனி, சில்லாங்காட்டு புதூர், சேனாதிபாளையம், ஆகிய பகுதிகள்.

Read more Photos on
click me!

Recommended Stories