ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: கூட்டுறவுத் துறை வெளியிட்ட குட் நியூஸ்!

Published : Jun 15, 2025, 01:22 PM IST

தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை அங்கீகார விதியில் மாற்றம் செய்யப்பட்டு, துல்லியம் 90% இல் இருந்து 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை விரைவாகப் பெற்றுச் செல்ல முடிகிறது.

PREV
15
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு

தமிழகம் முழுவதும் உள்ள 37,328 ரேஷன் கடைகளில் (26,618 முழுநேரக் கடைகள், 10,710 பகுதிநேரக் கடைகள்) பொருட்கள் விநியோகம் சீராக நடைபெறுவதைச் உறுதிசெய்யும் வகையில், கைரேகை அங்கீகார விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரேஷன் பொருட்களை விரைவாகப் பெற்றுச் செல்ல முடிகிறது.

25
மின்னணு விற்பனை (பி.ஓ.எஸ்.) கருவி

ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய, மின்னணு விற்பனை (பி.ஓ.எஸ்.) கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவியில், குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும். இந்தக் கைரேகை, ஆதார் அட்டையில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.

ஆரம்பத்தில், கைரேகை 40% துல்லியமாக ஒத்துப்போனாலே பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பின்னர் இந்த விதி 90% துல்லியமாக ஒத்துப்போக வேண்டும் என்று திடீரென மாற்றப்பட்டது.

35
90% துல்லியம் ஏற்படுத்திய சிக்கல்கள்

90% துல்லியம் என்ற விதி அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலான மக்கள் தங்கள் கைரேகையை 2, 3 முறையாவது வைக்க வேண்டியிருந்தது. இதனால், ரேஷன் கடைகளில் அதிக நேரம் செலவானது. சில நேரங்களில் கைரேகை சரியாகப் பதியாவிட்டால், கருவிழி பதிவு கருவி மூலம் சரிபார்க்கப்பட்டது. இது மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது.

45
கூட்டுறவுத் துறையின் நடவடிக்கை

பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவுத் துறை மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தது. இதன் விளைவாக, கைரேகை பதிவின் 90% துல்லியம் 70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

55
காலவிரயம் ஏன்?

இந்த மாற்றத்தால், தற்போது ரேஷன் கடைகளில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விரைவாக வழங்கப்படுகின்றன. மேலும், இந்த 70% கைரேகை ஒப்புதலை இன்னும் 10% குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், "தற்போது, கைரேகை பதிவு ஒருமுறை வைத்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துள்ளதால், முன்பைவிட சற்று வேகமாக பில் போட முடிகிறது. இருப்பினும், எடை எந்திரத்துடன் பி.ஓ.எஸ். கருவி இணைப்பு மற்றும் இணையதள வேகம் குறைவு காரணமாகவும் காலவிரயம் ஆகிறது. அதற்கும் தீர்வு கண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories