காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை? இதோ முழு விவரம்!

Published : Jun 15, 2025, 07:57 AM IST

2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில், பள்ளியின் வேலை நாட்கள், பொது விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. 

PREV
15
பள்ளிக்கல்வித் துறை

School Education Department: பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு வருவது வழக்கம். அதன்படி 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. இதில், பள்ளியின் வேலை நாட்கள், பொது விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள், ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம், உட்பட பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

25
அனைத்து சனி ஞாயிறு விடுமுறை

;அதில், 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் கல்வியாண்டில் மொத்தம் 21 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது மற்றும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம்.

35
காலாண்டு தேர்வு

1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 18ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி முடிவடைகிறது. பின்னர் செப்டம்பர் 27 சனிக்கிழமை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வருகிறது. மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி வருகிறது.

45
அரையாண்டு தேர்வு

1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருகிறது.

55
முழு ஆண்டு தேர்வு

நடப்புக் கல்வியாண்டில் முக்கியமான முழு ஆண்டு தேர்வு 2026 ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. அதே ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஆகும். ஏப்ரல் 25ம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான கோடை விடுமுறை காலம் தொடங்குகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories