அனைத்து பள்ளி மாணவர்களும் ரெடியா.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை!

Published : Jun 15, 2025, 05:42 PM IST

தமிழக பள்ளி மாணவர்களுக்கான 2025-26 கல்வியாண்டின் விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வட்டாரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் ஜூன் முதல் ஜனவரி வரை நடைபெறும்.

PREV
14
தமிழக அரசு

தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்துவதற்காக பல்வேறு சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணிகள், புத்தகப் பைகள், உதவித்தொகை வழங்கப்படுகின்றன. இவை மாணவர்களுக்கு தரமான கல்வி, உள்கட்டமைப்பு, மற்றும் நிதி உதவிகளை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்விக்கு மட்டுமல்ல விளையாட்டு போட்டிகளுக்கும் அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாணடில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகள் குறித்த உத்தேச கால அட்டவணை வெளியாகியுள்ளது.

24
பள்ளிக்கல்வித் துறை

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 2025-26-ம் கல்வியாண்டில் வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை எவ்வித புகார்களுக்கும் இடம் பெறாமல் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

34
உலகத் திறனாய்வுப் போட்டிகள்

அதன்படி சர்வதேச விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் உலகத் திறனாய்வுப் போட்டிகள் ஜூன் 12ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடையும். சர்வதேச யோகா நிகழ்ச்சிகள் ஜூன் 20-ம் தேதி நடைபெறும். 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 30 முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும். இதேபோல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நடைபெறும். தொடர்ந்து மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின முதல்நிலை விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும். இதில் குத்துச்சண்டை, ஜூடோ, நீச்சல், ஸ்குவாஷ், ஜிமினாஸ்டிக், வாள் சண்டை, சிலம்பம், கேரம் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெறும். இதையடுத்து மாநில அளவிலான போட்டிகள் செப்டம்பர் 6 முதல் 9-ம் வரை நடைபெறும்.

44
மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள்

தொடர்ந்து இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்தின் (எஸ்ஜிஎஃப்ஐ) மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும். அதன்பின் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 26 முதல் 29-ம் தேதி வரையும், 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரையும், 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் ஜனவரி 5 முதல் 8-ம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories