கரூருக்கு போகல.. ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போக தெரியுது..? ஈரோட்டுக்கு மட்டும் வர தெரியுதா?விஜயை கலங்கடிக்கும் போஸ்டர்கள்

Published : Dec 18, 2025, 10:53 AM IST

41 உயிர்களை பறிகொடுத்த கரூருக்க செல்ல முடியவில்லை ஆனால் பாடல் வெளியீட்டு விழாவுக்காக மலேசியா செல்ல முடிகிறதா என தவெக தலைவர் விஜய்க்கு எதிராக ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.

PREV
13
கரூர் துயர சம்பவம்..

புதிதாக கட்சி தொடங்கிய தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு அதனை நிறைவேற்றினார். திருச்சி, அரியலூர், நாமக்கல்லைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடத்தப்பட்ட இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

23
ஈரோட்டில் விஜய்..

துயர சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலம் எந்தவித பணியையும் மேற்கொள்ளாமல் இருந்த விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கியதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அரங்கிற்குள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் திறந்த வெளியில் மக்கள் சந்திப்பை நிகழ்த்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று ஈரோட்டில் திறந்த வெளியில் மக்களை சந்திக்கிறார்.

33
விஜய்க்கு எதிர்ப்பு

ஆனால் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை கரூருக்கு சென்று பார்க்கவில்லை என்பது தற்போது வரை விஜய் மீதான விமர்சனமாக இருந்து வருகிறது. மேலும் கரூரின் அண்டை மாவட்டமான ஈரோட்டில் இன்று நடைபெறும் கூட்டத்திற்து அவர் தனி விமானத்தில் வந்து கலந்து கொள்கிறார். இந்த நிலையில் “ஈரோடு வரைக்கும் வந்தீங்களே கரூருக்கு போக மாட்டீங்களா..?, இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்ச்க்கு மலேசியா போறீங்களா? What Bro Its Very Wrong Bro.” என விஜய்யின் வருகைக்கு எதிராக ஈரோடு நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories