பெங்களூருவில் இருந்து ஒகேனக்கலுக்கு புல்லட்டில் சுற்றுலா சென்ற இரண்டு மருத்துவ மாணவர்கள்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர விளம்பர பலகையில் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வருண் கடப்பால் (22). அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிஸ்பால்சிங் (20). மாணவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து ஒகேனக்கலுக்கு புல்லட்டில் சுற்றுலா சென்றுள்ளனர்.
24
இருசக்கர வாகனம் விபத்து
நேற்று முன்தினம் இரவு ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அரசு போக்குவரத்து பணிமனை அருகே வளைவில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த விளம்பர பலகை மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
34
தலை துண்டாகி பலி
இதில், வாகனத்தை ஓட்டி சென்ற வருண் காடாபால் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற மாணவர் சிசுபால் சிங் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தேன்கனிக்கோட்டை போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை அதி வேகத்தில் இயக்கியதே விபத்து காரணம் என தெரியவந்துள்ளது. சுற்றுலா சென்ற இளைஞர் தலை துண்டாகி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.