மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த கோர விபத்தில் நெல்லையைச் சேர்ந்த முதுநிலை மேலாளர் கல்யாணி என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மீட்பு.
மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள கட்டிடத்தின் 2ம் தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு ஊழியர்கள் வீட்டுக்கு ஒவ்வொருவராக சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
24
தீ விபத்து
சிறிது நேரத்தில் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதால் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். ஆனால் சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து ஊழியர்களை மீட்டனர்.
34
எல்ஐசி முதுநிலை மேலாளர் பலி
இருப்பினும் நெல்லையை சேர்ந்த எல்ஐசி முதுநிலை மேலாளர் கல்யாணி (55) இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நிர்வாகி அதிகாரி ராம் (44) தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து உயிரிழந்த கல்யாணி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில்: எல்.ஐ.சி. அலுவலகத்தில் புதிய திட்டம் ஒன்றின் அறிமுக விழா, வியாழக்கிழமை நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் தீ விபத்து ஏற்பட்டது. எல்ஐசி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.