அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்

Published : Nov 27, 2025, 09:16 AM IST

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்புப் படை காவலர் மகாலிங்கம், இன்று அதிகாலை தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணை.

PREV
13

மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம். இவர் சிறப்பு படை காவலராக 2023ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு முன்பாக நேற்று இரவு முதல் பாதுகாப்பு பணியில் மகாலிங்கம் இருந்துள்ளார். அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

23

அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் வந்து பார்த்த போது மகாலிங்கம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மகாலிங்கத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

33

இந்த சம்பவத்தை அடுத்து உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories