9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! செப்டம்பர் 30 வரைக்கும் தான் டைம்!

Published : Sep 29, 2025, 09:50 AM IST

மத்திய அரசின் பிரதமர் இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை (PM YASASVI) திட்டம், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் பிரிவு மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குகிறது. 

PREV
14
பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரதமர் இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை திட்டம் என்பது, பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். PM YASASVI Scholarship என்பது Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்பதன் சுருக்கம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
மாணவர்களுக்கு உதவித்தொகை

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில்: இதர பிற்படுத்தப்பட்டோர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் (‘யசஸ்வி’) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025- 26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

34
9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை

இந்த திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் பயனடைந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) உள்ள Renewal Application என்ற இணைப்பில் சென்று OTR எண் பதிவு செய்து 2025-26-ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இந்த ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட தளத்தில் செல்போன் எண், ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து புதிய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

44
உதவித் தொகை

பட்டியலிடப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை அணுகலாம். உதவித் தொகை பெற மாணவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் சரி பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories