தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி.. மத்திய அரசு செய்ததை லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி.. ஸ்டாலினுக்கு பதிலடி!

Published : Jan 23, 2026, 05:17 PM IST

பாஜக கூட்டணி அரசு அதிகார பரவல் மூலம் ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளது. ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்துக்கு திட்டங்களை கொடுத்துள்ளோம் என்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

PREV
13
திமுக ஆட்சியை விளாசித் தள்ளிய பிரதமர் மோடி

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''தமிழ்நாடு ஆட்சி மாற்றத்துக்கு ரெடி. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து தமிழகம் விடுவிக்கப்படும்'' என்று தெரிவித்தார். தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு ஏதும் செய்யவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

23
மத்திய அரசு செய்த திட்டங்களை லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி

இதற்கு பதிலடி கொடுத்து தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி, ‘’தமிழக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது என்பது குழந்தைகளுக்கு கூட தெரியும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி பணிகளை செய்துள்ளது. காங்கிரஸ், திமுக ஆட்சியை விட 3 மடங்கு அதிகமாக நிதியை தமிழகத்துக்கு அளித்துள்ளோம்.

33
தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி திட்டங்கள்

பாஜக கூட்டணி அரசு அதிகார பரவல் மூலம் ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளது. ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்துக்கு திட்டங்களை கொடுத்துள்ளோம். தமிழகத்தின் பலமே மீனவர்களும், விவசாயிகளும் தான். விவசாயிகள் கெளரவக் கொடை திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் கோடியை என்டிஏ அரசு கொடுத்துள்ளது.

 தமிழகம் எந்த அளவுக்கு முன்னேறுமோ நாடும் அந்த அளவுக்கு முன்னேறும். தமிழகத்தின் தயாரிப்புகளை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறோம். முத்ரா திட்டத்தால் தமிழக மக்கள் பலன் அடைந்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories