Published : Jan 23, 2026, 04:46 PM ISTUpdated : Jan 23, 2026, 06:17 PM IST
பிரதமர் மோடி பாரத் மாதே கி ஜே என தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி தமிழக சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என தமிழில் கூறினார். தனது பேச்சில் திமுக அரசை சரமாரியாக விளாசித் தள்ளினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் உரையாற்றினார். இதன் பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி பாரத் மாதே கி ஜே என தனது உரையை தொடங்கினார்.
24
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்
தொடர்ந்து பிரதமர் மோடி தமிழக சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம் என தமிழில் கூறினார். இதன்பிறகு பேசிய பிரதமர் மோடி, ''இங்கு அலைகடல் என கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது ஒரு செய்தி சொல்கிறது. அது என்னவென்றால் தமிழ்நாடு ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு துடிக்கிறது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுண்ட்டன் தொடங்கி விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.
34
கரப்ஷன், மாஃபியா, கிரிமினல்
தொடர்ந்து திமுகவை கடுமையாக விளாசிய பிரதமர் மோடி, ''திமுக ஆட்சி ஒரு CMC ஆட்சியாகும். அதாவது கரப்ஷன் (Corruption), மாஃபியா (Mafia), கிரிமினல் (Criminal) திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். தமிழகத்தின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் திமுக அரசு தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. திருப்பரங்குன்றம் தீப விவகாரம் விவாதப்பொருளானது உங்களுக்கு தெரியும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலில் திமுக ஈடுபட்டு வருகிறது. திமுகவும், காங்கிரசும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தன. ஆனால் பாஜக அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்தது. திமுக அரசு வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டவில்லை.
ஊழல் செய்வதிலேயே குறியாக இருக்கிறது. திமுக அரசு மக்களுக்காக அல்லாமல் ஒரு குடும்பத்துக்காக ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்தின் வளங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் மத்திய அரசு, மாநில அரசின் டபுள் எஞ்சின் ஆட்சி இங்கு அமையும்'' என்று கூறியுள்ளார்.