பட்டப்பகலில் ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி! பின்னணியில் பாமக பிரமுகரா? அதிர வைக்கும் தகவல்!

Published : Sep 06, 2025, 09:34 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது ஆதரவாளர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
16
ராமதாஸ் தீவிர ஆதரவாளர்

மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவராகவும், பாமக மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் ம.க.ஸ்டாலின் அவரது ஆதரவாளர்களான இளையராஜா அருண் உள்ளிட்டோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

26
பெட்ரோல் குண்டு வீச்சு

அதில் இரு குண்டுகள் வெடித்துச் சிதறியதில் அலுவலக கண்ணாடிகள் சேதமடைந்தன. இதனையடுத்து அவரது ஆதரவாளர்களான இளையராஜா, அருண் ஆகிய இருவரும் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் இரண்டு பேரையும் பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து இளையராஜா அருண் ஆகிய இருவரும் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

36
பாமகவினர் ஆர்ப்பாட்டம்

அங்கிருந்து லாவகமாக ம.க.ஸ்டாலின் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு திரண்ட பாமக தொண்டர்களும், வன்னியர் சங்கத்தினரும், கொலை முயற்சிக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆடுதுறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

46
சிசிடிவி காட்சி

இந்த சூழ்நிலையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். கும்பகோணம் மயிலாடுதுறை சாலை பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. மேலும் கும்பகோணம் மயிலாடுதுறை மெயின் சாலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் சாலையின் நடுவே டயர்கள் உள்ளிட்ட பொருட்களை கொளுத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பின்பு போலீசார் விரைந்து செயல்பட்டு எரிக்கப்பட்ட டயர்களை தண்ணீர் ஊற்றி அனைத்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

56
6 தனிப்படைகள் அமைப்பு

இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காரில் தப்பிய மர்ம நபர்கள் சென்னை நோக்கி சென்றதாக கருதப்படுவதால் ஒரு தனிப்படை போலீசார் சென்னை வருகை தந்துள்ளனர். இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ் அணியை சேர்ந்த ம.க.ஸ்டாலினுக்கு மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் மற்றும் கூடுதலாக வன்னியர் சங்கத்திலும் பதவி கொடுக்கப்பட்டது. அதேபோல் ம.க.ஸ்டாலினுக்கும், அன்புமணி அணியை சேர்ந்த வெங்கட் ராமனுக்கும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இருவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாகவே அதிகார மோதல் இருந்து வருகிறது.

66
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

கடந்த 2015ம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தார் ம.க.ஸ்டாலின். அப்போது வெங்கட்ராமன் பாமக மாநில துணைத்தலைவராக இருந்துள்ளர். அப்போதே அதிகார மோதல் காரணமாக இருவரும் ஒருவரையொருவர் கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories